- Tamil Lyrics
- English Lyrics
பரலோக இராஜ்ஜிய வாசிபரன்
இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி
1. ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே
2. திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம்
3. தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம்
4. நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம்
5. சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே
6. வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க
7. பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும்
8. நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன்
Paraloga Rajiya Vaasi
Paraloka Iraajjiya Vaasi
Paran Yesuvin Mey Visuvaasi
Puvi Yaaththirai Sey Parathaesi
Paran Paatham Nee Mika Naesi
1. Aapirakaam Eesaakkudanae
Aathip Pithaakkal Yaavarumae
Thaevanunndaakkina Mey Sthalamae
Thaetiyae Naatiyae Sentanarae
Anniyarae Parathaesikalae
2. Thirumpiyae Paarom Marantha Thaesam
Theeviram Selvom Suya Thaesam
Thootharkal Vaalum Paramathaesam
Thuyap Pithaa Oli Veesum Thaesam
Maelaaka Paktharin Sontha Thaesam
3. Thaniththaniyae Yaaththirai Selluvom
Koottangalaakath Thiranndu Selluvom
Kudumpam Kudumpamaakach Selvom
Jaathi Janangalum Kootich Selvom
Senaathipathi Karththar Pin Selvom
4. Nanmaiyaiyum Maenmaiyumaam Nakaram
Nala Asthipaara Puthu Nakaram
Vaakkuththaththaththin Thida Nakaram
Visuvaasaththaal Ataiyum Nakaram
Aerukintom Seeyon Sikaram
5. Saavu Thukkam Angae Illaiyae
Saaththaanin Senai Angillaiyae
Kannnneer Kavalai Angillaiyae
Kaarirul Konjamum Angillaiyae
Panjam Pasi Ontum Angillaiyae
6. Venn Vasthiram Pavani Nadakka
Venn Kuruththolai Koti Parakka
Paeriti Sthoththira Thoni Mulanga
Peruvellam Osaippattalikka
Karththaraik Kaannpom Kann Jolikka
7. Pon Porul Vaendaam Yesu Pothum
Mann Aasai Vaendaam Yesu Pothum
Paavamae Vaendaam Yesu Pothum
Lokamae Vaenndaam Yesu Pothum
Aaththuma Iratchakar Yesu Pothum
8. Nampikkai Pongap Paadiduvaen
Nala Manach Saatchi Naadiduvaen
Iththarai Yaaththirai Kadanthiduvaen
Akkarai Sernthu Vaalnthiduvaen
Antha Thinam Entu Kanndiduvaen