Aathi Muthal - ஆதி முதல் | Janet Caroline

Admin

ஆதி முதல் இருந்தவரே
ஆதியிலே வார்த்தையால் படைத்தவரே
சிறப்பான சிற்பமாய் என்னையுமே
செதுக்கினீரே உந்தன் சாயலிலே.

உருவாக்கின உம் கரங்களும்
உரு இழந்து தான் போனதோ
என்னை வரைந்திட்ட உம் கைகளில்
ஆணிகள் வரைந்ததோ.

"நீண்ட ஆயுசுள்ளவரே
ஜீவனின் அதிபதியானவரே
சுவாசத்தை ஊதினீர்
எனக்காக ஜீவன் தந்தீர்"

#பரலோக தேவனவர்
பாவிக்காய் பரிகார பலியானீர்
கரையில்லா பரிசுத்த கரங்களினால்
பாவக் கறைகளையும்
நீர் ஏற்றுக் கொண்டீர்.

ஓங்கிய உம் புயங்களும்
ஒடுங்கியே நின்றதோ
பலத்த உம் கரங்களும்
பெலன் இழந்து தான் போனதோ.

தேவனுக்கு சமமாய் இருப்பதையே
பொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரே
வெறுமையானீர் பரமனின் சித்தம் செய்ய
என் இடத்தை நீர் ஏற்றுக் கொண்டீர்.

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே ஜெயம் எங்கே?
சாத்தானின் சதிகளை
சிலுவையில் சிதைத்திட்டீர்.

Aaadhi Mudhal Irundhavare
Aadhiyile Vaarththaiyaal Padaiththavare
Sirappana Sirpamaai Ennaiyume
Sethukineere Undhan Saayalile

Uruvaakkina Um Karangallum
Uru Izhandhu Thaan Poanadho?
Ennai Varainthitta Um Kaikallil
Aani-gal Varainthatho?

"Neenda Aayusullavare
Jeevanin Adhipathiyaanavare
Swaasaththai Oodhineer
Enakkaaga Jeevan Thantheer"

Paraloga Devanavar
Paavikkaai Parikaara Baliyaanir
Karaiyillaa Parisutha Karangalinaal
Paava Kkaraigala Yum
Neer Etruk Kondeer

Ongiya Um Puyangalum
Odungiye Ninradho?
Palatha Um Karangalum
Palan Izhandhu Thaan Poanadho?

Devanukku Samamaai Iruppadhaiye
Poruttaaga Ennaamal Thaazhthineere
Verumaayaaneer Paramanin Siththam Seiyya
En Idaththai Neer Etruk Kondeer

Maranamae Un Koor Engae?
Paadhaalame Jeyam Engae?
Saathaanin Sathigalai
Siluvaiyil Sithaithitteer