Amarnthiruppom Song Lyrics | Pastor Lucasekar
Lucas Sekar
அமர்ந்திருப்போம் காத்திருப்போம்
கர்த்தரின் வார்த்தை நிறைவேறுமே
காற்றையும் காணவில்லை
மழையையும் பார்க்கவில்லை
ஆனாலும் வாய்க்கால் எல்லாம் நிரம்பிடுமே
சொன்னதை செய்திடுவார்
செய்வதை சொல்லிடுவார்
சொன்னதை செய்யும் வரை கைவிடவே மாட்டார்
அற்புதம் நடக்கும் அதிசயம் நடக்கும்
நம்பிக்கை வீண் போகாது
யாக்கோபின் தேவன் முன்னே
கடல் கண்டு விலகி ஓடும்
பரிசுத்த தேவன் முன்னே
யோர்தானும் பின்னே ஓடும்
மலைகளும் பர்வதமெல்லாம் மெழுகு போல் உருகி ஓடும்
கர்த்தரின் பிரசன்னத்தால் எல்லாமே உருகி ஓடும்
புது வழி திறக்குமே
அற்புதம் நடக்குமே
நம்பிக்கை வீண் போகாது
சத்துருவின் பிடரிகள் எல்லாம் நம் கையில் ஒப்புக்கொடுப்பார்
எல்லோரும் காலில் விழுவார் திரும்பவும் எழும்ப மாட்டாரே
தூளாக இடித்திடுவோம் சேற்றை போல் மாற்றிடுவோம்
வீதி எல்லாம் எரிந்திடுவோம் கர்த்தர் நாமம் உயர்த்திடுவோம்
சேனைக்குள் பாய்ந்திடுவோம் மதிலை தாண்டிடுவோம்
நம்பிக்கை வீண் போகாது
அனுகூல வாசல்கள் எல்லாம் நிச்சயமாய் திறந்திடுவாரே
தேசத்தின் கதவுகள் எல்லாம் தானாக திறந்திடுமே
பெரிய பர்வதமெல்லாம் சமபூமி ஆகிடுமே
சிங்கத்தின் மேல் நடந்து சர்பத்தை மிதித்திடுவோம்
பலவானின் வில்லை உடைப்பார் நம்மையும் தூக்கி எடுப்பார்
நம்பிக்கை வீண் போகாது
Advertisement